ரயிலுடன் மோதி இளைஞர் பலி

Colombo (News 1st) கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற புலதிசி ரயிலில் மோதி திராய்மடுவ பகுதியில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருவப்பங்கேணி, சிவ நாகதம்பிரான் கோயில் வீதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞரொருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

திராய்மடுவ பகுதியில் நேற்றிரவ(25) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles