இஸ்ரேல்-ஹமாஸ் போர் : கடந்த 24 மணி நேரத்தில் 63 பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு..!

கான் யூனிஸிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறியிருப்பினும் அங்குள்ள வைத்தியத் துறைக்கு ஏற்பட்ட சேதம், எவராலும் கற்பனை செய்ய முடியாத அளவிலுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 63 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும், 45 பேர் காயமடைந்ததாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 33,545 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் , 76,094 பேர் காயமடைந்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles