கிரீன்லாந்தை காக்க வந்த ரட்சகன் : ஆர்டிக்கில் உருவான ராட்சத வைரஸ்..!

கிரீன்லாந்தில் உள்ள பனி மூடிய ஆர்டிக் பிரதேசத்தில் ராட்சத வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை வைரஸ்கள் 1981 இல் முதன்முறையாக கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஐஸில் இப்போதுதான் முதன்முறையாக கடண்டுபிடிக்கப்படுள்ளது.

பொதுவாக பாக்டீரியாவை விட 1000 மடங்கு சிறிய அளவில் உள்ள வைரஸ்கள் 20- 200 நானோ மீட்டர்கள் அளவே இருக்கும்.ஆனால் இந்த ராட்சத வைரஸ்கள் 2.5 மைக்ரோ மீட்டர்கள் என்ற அளவில் பாக்டீரியாவை விட பெரிதாக உள்ளன. இவை மனிதக் கண்களால் மட்டும் இன்றி சிறிய வகை மைக்ரோஸ்கோப்பினாலும் பார்த்தறிய முடியாதவை ஆகும்.

இந்த வைரஸ்களால் நன்மையே விளையும் என்று டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதாவது இந்த ராட்சத வைரஸ்கள் பனிக்கட்டிகள் உருகுவதைத் தடுக்க மறைமுகமான ஆயுதங்களாக செயல்படுகிறதாம். பனியின் மேற்பரப்பில் இருந்தும், துளைகளில் இருந்தும் இந்த வைரஸ்களின் டிஎன்ஏ க்கள் சேகரிக்கப்பட்டு மேற்கொண்டு ஆராய்ச்சி செயப்பட்டு வருகிறது.

மைக்ரோ பையோம் உயிரியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில், இந்த ராட்சத வைரஸ்கள் பனியை சேதப்படுத்தும் ஆல்கே – களை அழித்து பனிக்கடி உருகாமல் இருக்க உதவுகிறது. ஆனால் இந்த ராட்சத வைரஸ்கள் எந்த அளவுக்கு வீரியத்துடன் செய்யப்படும் என்பதில் சந்தேகம் உள்ளது. மேற்கொண்டு ஆராய்ச்சி செய்வதன் மூலமே அதைத் தெளிவுபடுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஆர்டிக் பிரதேசத்தில் பணிக்கட்டிகள் வேகமாக உருகி வரும் நிலையில் இந்த ராட்சத வைரஸ்கள் அதற்கு தீர்வாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles