கடலில் நீராடிய மலேசியப் பிரஜை உயிரிழப்பு..!

உனவட்டுன கடலில் நீராடிக்கொண்டிருந்த மலேசியப் பிரஜையொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவமானது நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிகின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 61 வயதுடைய மலேசியப் பிரஜையாவார்.

இவர் உனவட்டுன கடலில் நீராடிக்கொண்டிருக்கும்போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

குறித்த நபரை அவ்விடத்திலுள்ளவர்கள் காப்பாற்றி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles