கேரளாவில் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று

கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 43 வயதுடைய ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோழிக்கோட்டைச் சேர்ந்த அந்த நபரின் மாதிரிகள் இறுதி செய்வதற்காக புனெவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கான முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஃபெரோக்கைச் சேர்ந்த தொழிலதிபரான அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளைச் சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது.

சுகாதாரத் துறை அதிகாரிகளின் தகவலின்படி, முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர், புதன்கிழமை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே. முரளீதரன் கூறுகையில்,

நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவும்.

பாதிக்கப்பட்டவர் முதலில் காய்ச்சல் ஏற்பட்ட பின்னர் குறைந்தது. அதன்பிறகு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறுதி ஆய்வின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளாமல், சுகாதாரத்துறை வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles