உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள பிரதான குழந்தைகள் வைத்தியசாலையில் நேற்றைய தினம் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இத்தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 87 பேர் படுகாயமடைந்த்தாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் பல்வேறு நகரங்களின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 41 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 170 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், வைத்தியசாலை பிரசவ அறைகள், பாலர் பாடசாலை, வீடுகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
