விராட் கோஹ்லியின் ஹோட்டல் மீது வழக்கு..!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான விராட் கோஹ்லிக்கு ஒரு ஹோட்டல் பெங்களூரில் சொந்தமாக உள்ளது. இந்த ஹோட்டலில் மது அருந்தும் வசதியும் இருக்கின்றது.

நேற்றைய தினம் இரவு விராட் கோஹ்லியின் ஹோட்டலில் அதிக சத்தம் கேட்டதாக அருகில் குடியிருந்தவர்கள் பொலிஸில் முறைப்பாடு தெரிவித்திருகின்றனர்.

இதனடிப்படையில் குறித்த இடத்திற்கு பொலிஸார் இரவு 1.30 மணிக்கு சென்று பார்த்த போது, விதியை மீறி ஒரு மணிக்கு மேலும் ஹோட்டல் செயற்பட்டுக்கொண்டிருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து பொலிஸார் ஹோட்டலை உடனடியாக மூடுமாறு கூறியதோடு விராட் கோஹ்லிக்கு சொந்தமான ஹோட்டலின் மீது விதிமீறலில் ஈடுபட்டதற்காக வழக்குப் பதிவு செய்தனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles