24,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது..!

டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர் 24,000 மென்செஸ்டர் ரக சிகரெட்டுகளுடன் நேற்று (28) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் களுத்துறை பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன் இவர் கொண்டு வந்த சிகரெட்டுகளின் பெறுமதி 4,097,253 ரூபாவென தெரியவந்துள்ளது .

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட் கையிருப்பு சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles