Sunday, September 22, 2024
Homeகேரளாவில் மேலும் 6 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் : பாதிப்பு 15 ஆக உயர்வு..!

கேரளாவில் மேலும் 6 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் : பாதிப்பு 15 ஆக உயர்வு..!

கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவ தொடங்கின. அதிலும் “பிரைமரி அமீபிக் மெனிங்கே என்செபா லிடிஸ்” என்று அழைக்கப்படும் மூளையை தாக்கும் “அமீபிக் மூளைக்காய்ச்சல்” கடந்த மாதம் பரவத் தொடங்கியது.

உயிர்க்கொல்லி நோயான இந்த காய்ச்சலுக்கு 3 குழந்தைகள், ஒரு வாலிபர் என மொத்தம் 4 பேர் அடுத்தடுத்து பலியாகினர். மேலும் சிலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் இருக்கும் அமீபாக்கள், குளிப்பவர்களின் உடலுக்குள் காதுமடல் மற்றும் மூக்கு துவாரம் வழியாக புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

ஆகவே இந்த பாதிப்பில் இருந்து தப்ப தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் குளிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் மேலும் 6 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 5பேர் கடந்த 23-ந்தேதி இறந்த வாலிபரின் நண்பர்கள் ஆவர்.

அவர்கள் 6 பேரும் தங்களது கிராமத்தில் உள்ள பாசி நிறைந்த குளத்தில் குளித்ததன் மூலமாக தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த குளத்தில் யாரும் குளிக்கக்கூடாது என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

அவர்களை தவிர மேலும் ஒருவருக்கு எப்படி பாதித்தது என்று சுகா தாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 6 பேரில் 4 பேர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களையும் சேர்த்து கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு 15 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் தெரி வித்திருக்கிறார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments