காஸா பாடசாலை மீது தாக்குதல் : 100க்கும் அதிகமானோர் பலி..!

காஸா நகரின் தராஜ் பகுதியில் உள்ள அல்-தாபின் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலையில் அதிகாலை தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்த போதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 60,000 முதல் 70,000 வரையிலான மக்களை இஸ்ரேலிய இராணுவம் தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸிலிருந்து ஏற்கனவே அல்-மவாசி பகுதிக்கு வெளியேற்றும்படி கட்டாயப்படுத்தியதாக பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா நிறுவனம் (UNRWA) தெரிவித்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles