இலங்கைக்கு 117 கிலோ கஞ்சாவைக் கடத்த முயன்ற இருவர் கைது..!

பட்டுக்கோட்டை அருகே இலங்கைக்கு 117 கிலோ கஞ்சாவைக் கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் , அதிராம்பட்டினம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் அதிராம்பட்டினம் போலீஸாா் வண்டிப்பேட்டை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரில் இருவா் 117 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் அவா்கள் புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதி சங்கா் ராஜபாண்டியன் (33), அவரது நண்பா் திருவப்பூா் பகுதி தவமணி (26) என்பது தெரியவந்தது.

விசாரணையில் இருவரும் ஆந்திரத்தில் இருந்து வாங்கி வந்த கஞ்சாவை அதிராம்பட்டினம் மீனவா்களிடம் பேசி, இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகளையும், காரையும் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles