பாகிஸ்தானில் தேசியக்கொடி விற்பனை செய்த கடை மீது குண்டு வீச்சு : 3 பேர் பலி..!

பாகிஸ்தானில் சுதந்திர தினத்தையொட்டி கடையொன்றில் தேசியக்கொடி விற்பனை செய்ததால் அக்கடையை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பலூசிஸ்தான் குழுக்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் பாகிஸ்தான் தேசியக்கொடியை விற்பனை செய்ய வேண்டாம் என பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

விடுக்கப்பட்ட எச்சரிக்கையை மீறி பலூசிஸ்தான் மாகாணத்தில் குயூடா பகுதியில் விற்பனை செய்த கடை மீது நேற்றைய தினம் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இந்த தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles