Friday, February 6, 2026
Homeஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகள் பயன்படுத்த திட்டம்..!

ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகள் பயன்படுத்த திட்டம்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தேர்தல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வாக்குப்பெட்டிகள் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவுகளில் தயாரிக்கப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படும்.

இவ்வருட தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியன் ரூபா போதுமானதாக இருக்குமா என்று கேட்டதற்கு, 8 பில்லியன் ரூபா மட்டுமே செலவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular