Friday, February 6, 2026
Homeபனி குகை இடிந்து விபத்து : சுற்றுலா பயணி உயிரிழப்பு - இருவர் மாயம்..!

பனி குகை இடிந்து விபத்து : சுற்றுலா பயணி உயிரிழப்பு – இருவர் மாயம்..!

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 25 பேர் கொண்ட சுற்றுலாக் குழு ஐஸ்லாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ப்ரீடாமெர்குர்ஜோகுல்லுக்கு சென்றபோது, திடீரென பனி குகை இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில், பனிக்கட்டியின் அடியில் 4 பேர் சிக்கியதாகவும், பின்னர் இருவர் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்திருந்த நிலையில், அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு நபர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைதொடர்ந்து, காணாமல் போன மேலும் இருவரையும் தேடும் பணியை நேற்று தொடங்கிய மீட்புப் படையினர், இன்றும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நிலைலமை கடினமாக உள்ள சூழலில் ஏராளமான மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular