சிங்கப்பூரில் இராணுவ பகுதிகளை டிரோன் மூலம் படம்பிடித்த தாய்லாந்து நாட்டவருக்கு அபராதம்

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் முறையான அனுமதியின்றி டிரோனை இயக்கி, பாதுகாக்கப்பட்ட ராணுவப் பகுதிகளைப் படம்பிடித்த 32 வயது தாய்லாந்துப் புகைப்படக் கலைஞர் பிரயுத் ரித்திசாய்போர்ன்குல்லுக்கு $15,000 அபராதம் விதிக்கப்பட்டது.

2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பாசிர் லாபா முகாம், சாஃப்டி ராணுவப் பயிற்சிப் பள்ளி ஆகிய பாதுகாக்கப்பட்ட ராணுவ எல்லைகளுக்குள் அவரது டிரோன் ஊடுருவியது.

அதனைச் சிங்கப்பூர் விமானப் படை கண்டறிந்து, பொது விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அதனைத் தொடர்ந்து, பொலிஸார் நடத்திய சோதனையில் அந்த டிரோன் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் பாதுகாக்கப்பட்ட ராணுவப் பகுதிகள் தொடர்பான மூன்று காணொளிகள் உட்பட மொத்தம் 18 காணொளிப் பதிவுகள் இருந்தது கண்டறியப்பட்டது.

முறையான உரிமங்கள் இன்றி, அனுமதி இல்லாமல் பாதுகாக்கப்பட்ட வான்வெளியில் டிரோனை இயக்கிய இரண்டு குற்றச்சாட்டுகளை பிரயுத் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பின்னர் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles