Sunday, October 20, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
Home28.08.2024 புதன்கிழமை இன்றைய இராசி பலன்

28.08.2024 புதன்கிழமை இன்றைய இராசி பலன்

குரோதி வருடம் ஆவணி மாதம்  பன்னிரண்டாம் நாள் புதன்கிழமை.  ஆங்கில வருடம் 28.08.2024

இன்றைய இராசி பலன்

மேஷராசி

செலவுக்கு தகுந்த வருமானம் பார்ப்பீர்கள். எதிர்ப்புகளை மீறி ஏற்றம் பெறுவீர்கள். கலைத்துறையில் அமோக வெற்றி பெறுவீர்கள். பெண் நண்பர்களிடம் எல்லை மீறி பழகி அவமானப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக உறவினர்கள் செய்யும் சூழ்ச்சியில் சிக்குவீர்கள். திருமணம் போன்ற நல்ல காரியத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள்.

ரிஷபராசி

தந்தைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும்.

மிதுனராசி

கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் – அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிறிது நேரம் செலவாகும்.  புதிய சிந்தனை உள்ளவர்களை டீல் செய்யும்போது, இன்று நீங்கள் பெறும் கூடுதல் அறிவு உதவி செய்யும். இன்று நீங்கள் உங்கள் ஓய்வு நேரத்தில் உங்கள் தாயிற்கு சேவை செய்ய முடிவு செய்வீர்கள் ஆனால் எதிர்பாராத வருகின்ற வேலைகளால் அவ்வாறு நடக்காது. இதனால் உங்களுக்கு கவலை அளிக்கும்.

கடகராசி

தொழிலில் முன்னேற்றம் அடைந்து எதிர்பாராத வருமானம் பெறுவீர்கள். அதைச் சேமிப்பாக மாற்றுவீர்கள். வீட்டு மனை வாங்கும் ஆசையை நிறைவேற்றுவீர்கள். மனைவியிடம் விட்டுக் கொடுத்து நடந்து குடும்பத்தில் இருந்த இறுக்கத்தை குறைப்பீர்கள். வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வீர்கள். பணியிடங்களில் மன அழுத்தத்தால் பாதிப்படைவீர்கள்.

சிம்மராசி

தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்கவேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக் கும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமை அவசி யம். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் உதவி கிடைப்பது மகிழ்ச்சி தரும்.

கன்னிராசி

விருந்தினரின் அதிர்ஷ்டம் காரணமாக, நீங்கள் இன்று நிதி நன்மைகளைப் பெறலாம். இன்று நீங்கள் அறிவுரை கூறினால் – அறிவுரை பெறவும் தயாராக இருங்கள். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. வெளிநாட்டு வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் இன்று விரும்பிய முடிவுகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், வேலைத் தொழிலுடன் தொடர்புடைய இந்த ராசிக்காரர்கள் இன்று தங்கள் திறமைகளை இந்த துறையில் பயன்படுத்தலாம்.

துலாம்ராசி

வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி செய்யாதீர்கள். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மறக்காதீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கஷ்டத்தை சந்திப்பீர்கள். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஆசைப்படாதீர்கள். கடுமையாக பாடுபட்டு கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கை தேவை.

விருச்சிகராசி

எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் பொறுமை மிகவும் அவசியம்.

தனுசுராசி

சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடி வுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பண வரவுக் கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்குமேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும்.

மகரராசி

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் இருப்பதால் உற்சாகமாகவே இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிப்பதில் பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள்.

கும்பராசி

நீண்ட காலமாக நிதி நெருக்கடியைச் சந்தித்தவர்கள், இன்று எங்கிருந்தும் பணம் பெறலாம், இது வாழ்க்கையின் பல சிக்கல்களை நீக்கும். சில த்ரில்லான செய்திகளை பிள்ளைகள் கொண்டு வரலாம். உங்கள் துணைவரிடம் உணர்வுரீதியில் பிளாக்மெயில் செய்வதைத் தவிர்த்திடுங்கள். குடும்பத்தில் புதிய முயற்சி தொடங்க ஏற்ற நாள். இன்று நீங்கள் உங்கள் மனைவியை ஆச்சரியப்படுத்தலாம், உங்கள் எல்லா வேலைகளையும் தவிர, இன்று அவர்களுடன் நேரத்தை செலவிடலாம். ‘முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மீனராசி 

வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து செல்வீர்கள். பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பணி இடத்தில் இருந்த சிக்கலைத் தீர்ப்பீர்கள். கூட்டுத் தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் மேம்பாடு காண்பீர்கள். ஐடி ஊழியர்கள் அதிக வருமானம் பெறுவீர்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments