இலங்கை கிரிக்கட்டை தடை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

இங்கிலாந்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள் குழுவினர் ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கை மனித உரிமைகளை மீறிய நாடு என்பதால் இலங்கை கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் தங்களின் தமிழ் சமூகத்துக்கு உரிமை இல்லை என்றும், அவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், இலங்கை யுத்த குற்றம் இடம்பெற்ற நாடு எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

விடுதலை புலிகள் அமைப்பின் உத்தியோகபூர்வ இலச்சினையை காட்சிப்படுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles