கியூபா அமெரிக்காவுக்கு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது. அமைதியான உடன்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகமில்லை என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு இரு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில், அமெரிக்கர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோமீது அமெரிக்கா கொலைக் குற்றச்சாட்டை சுமத்திய பின்னர் வெளிவிவகார அமைச்சர் மேற்சொன்ன கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
வோஷிங்டனின் விருப்பம் இராஜதந்திர தீர்வு. ஆனால், எந்தவோர் அச்சுறுத்தலில் இருந்தும் தனது நாட்டை பாதுகாக்கும் உரிமையும் கடமையும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, கியூபாவின் வெளிவிவகார அமைச்சர் புரூனோ ரொட்ரிக்ஸ், அமெரிக்க வெளிவிவகார செயலர் பொய் கூறுகிறார். கியூபா ஒருபோதும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்று கூறியுள்ளார்.
இதனிடையே, வெனிசுலா பெற்றோலிய வளத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் அமெரிக்கா கொண்டுவந்தது. இதனால், அந்த நாட்டின் எரிபொருளை நம்பியிருந்த கியூபா பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. இதையடுத்து, அந்த நாட்டுக்கு 10 கோடி டொலர் மனிதாபிமான உதவியையும் வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
