கனடாவிலிருந்து தனித்து செல்லுமா அல்பேர்டா! ஒக்ரோபரில் வாக்கெடுப்பு!

கனடாவிலிருந்து விலக வேண்டுமா என்ற வரலாற்று சிறப்புமிக்க பொது வாக்கெடுப்பை அல்பேர்டா மாகாணம் நடத்தவுள்ளது. கடந்த பல தசாப்தங்களில் கனடாவின் தேசிய ஒருமைப்பாட்டை கடுமையாக சோதிக்கும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

பொது வாக்கெடுப்பு அறிவிப்பை அல்பெர்டா மாகாண முதல்வர் டானியல் ஸ்மித் வியாழக்கிழமை வெளியிட்டார். கனடாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக 3 இலட்சத்துக்கும் அதிகமான கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டமையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேநேரம், கனடாவிலேயே தொடர வேண்டும் என்ற மனுவுக்கு 4 இலட்சத்துக்கும் அதிகமான கையொப்பங்கள் கிடைத்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பொது வாக்கெடுப்பு எதிர்வரும் ஒக்ரோபர் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. எனினும், தாம் கனடாவின் ஒரு பகுதியாக அல்பெர்டோ தொடரவேண்டும் என்றே வாக்களிப்பேன் என்று அந்த மாகாண முதல்வர் டானியல் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 1995ஆம் ஆண்டு இதே ஒருமைப்பாட்டு சவாலை கனடா எதிர்கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் மிகச்சிறிய வித்தியாசத்தில பிரிந்து செல்லும் முடிவு தோல்வியை சந்தித்தது.

அல்பெர்டா மாகாணம் கனடாவின் 4ஆவது பெரிய மாநிலமாகும். அத்துடன், எரிபொருள் வளத்தை அதிகம் கொண்டுள்ளது. 1905ஆம் ஆண்டு தனி மாகாணமாக உருவானது. பழமைவாத ஆட்சி முன்னெடுக்கப்படும் இந்த மாகாணத்தில் 42 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles