Saturday, September 21, 2024
Homeஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நட்டஈட்டை செலுத்திய பூஜித்த

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நட்டஈட்டை செலுத்திய பூஜித்த

உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நஷ்டஈடாக 75 மில்லியன் ரூபாவை முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர செலுத்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 30 திகதி அவர் முழுத் தொகையினையும் செலுத்தி முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எட்டு தவணைகளின் அடிப்படையில் அவர் இந்த நஷ்டஈட்டினை செலுத்தியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விதிக்கப்பட்டிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடு தொகையும் செலுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 16 ஆம் திகதி அவர் இந்தத் தொகையை செலுத்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாதுகாப்புப் படைத் தலைவரும் போதிய உளவுத்துறையைப் பெற்றிருந்தும் ஈஸ்டர் ஞாயிறு தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபா தொகை நட்டஈடாக செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எவ்வாறெனினும், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன இதுவரை தனது நட்டஈட்டை செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments