இந்தியாவின் பெங்களூரில் குளிர்சாதனப் பெட்டியில் இளம் பெண்ணொருவரின் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டதுடன், மகாலட்சுமி என்ற 29 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த பெண் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் அவரது உடலின் சுமார் 30 பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெண் குடியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் வசிப்பவர்கள் முறைப்பாடு செய்ததன் பேரில், பொலிஸார் வந்து வீட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
சோதனையின்போது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்து இந்த பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கொல்லப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உடற்பாகங்களில் புழு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.