மக்களின் காணி உரிமை , வீட்டு பிரச்சினை , இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பின்மை , மாணவர்களின் கல்வி நிலை என்பவற்றுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இன்றியமையாதது என ஐக்கிய ஜனநாயக குரலின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பதுளை -ஹாலியெல -உனுகல பிரதேசத்தில் மக்களுடன் சுமுகமான முறையில் அவர் கலந்துரையாடினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ்
தறபோது மக்களை ஏமாற்றுவதற்காக ஐயாயிரம், ஐம்பதாயிரம் என பணம் கொடுத்து வந்தாலும், 14ஆம் திகதிற்கு பின்னர் மக்கள் கைவிடப்படுவார்கள்.
எந்த பிரச்சினை வந்தாலும் முன்வந்து அதற்கான தீர்வை பெற்றுதருவதற்கு காரணம், என் மக்களின் பிரச்சினை எனக்கு தெரியும் என்பதால்.
யாரும் எனக்கு அதனைக் கூற தேவையில்லை. மக்களின் கலை,கலாச்சார, பண்பாட்டையும், மாணவச்செல்வங்களின் கல்வியையும், இளைஞர்களுக்கான வேலை திட்டங்கள் , அவர்களின் இருப்பு தொடர்பாக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற நாம் , நாடாளுமன்ற தேர்தலில் தோற்க போவதில்லை மக்களை அரசியல் அநாதையாக்க விடப்போவதில்லை.
எங்களை தோற்கடிக்க பலர் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர்.அது இம்முறை நடக்காது” என்றார்.
இந்த கலந்துரையாடலின் போது மக்களும் தங்களது வாக்கினை ஐக்கிய ஜனநாயக குரலின் பதுளை மாவட்ட வேட்பாளரன வடிவேல் சுரேஷ்க்கே வழங்குவோம் என ஆதரவளித்தனர்.