ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளுக்கு செல்லவிருக்கின்றார்.

இவ்விஜயத்துக்காக எதிர்வரும் 13 முதல் 19 வரையான காலப்பகுதியை பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார்.

ஜுன் 14ஆம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனை , பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதன் மூலம் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான உறவை மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, ஜுன் 15 ஆம் திகதி ஸ்லோவேக்கியாவுக்கு செல்வார்.

அந்நாடு விடுதலை (1993) பெற்ற பிறகு இந்திய பிரதமர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணமாக இது அமைந்துள்ளது.

ஸ்லோவேக்கியாவின் பிரதமர், ஜனாதிபதி ஆகியோருடன், பிரதமர் மோடி இரு தரப்பு சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

அதேவேளை, இதன்பின்னர் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் G7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.

இதில் சர்வதேச அளவிலான பொருளாதார மீட்சி, உலக நாடுகளின் ஒற்றுமை மற்றும் பொறுப்பான AI பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles