Thursday, November 28, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain Newsஅம்பாறை உழவு இயந்திர விபத்து: பாடசாலை அதிபர் உட்பட நால்வர் கைது

அம்பாறை உழவு இயந்திர விபத்து: பாடசாலை அதிபர் உட்பட நால்வர் கைது

அம்பாறை – காரைத்தீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் மத்ரசா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதி மத்ரசா பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர் குறித்த மாணவர்கள் வீட்டிற்கு செல்ல பஸ் இன்மையால், தலைமையாசிரியர் உழவு இயந்திரத்தில் செல்லுமாறு அறிவுறுத்தியதோடு அதற்காக பணமும் வழங்கியுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

வெள்ளம் காரணமாக குறித்த வீதியில் பஸ் சேவைகள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் பணத்திற்காக பயணிகளை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரத்தில் மாணவர்களை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி ஆபத்தானது என்பதால் உழவு இயந்திரத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என இராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்தனர்.

11 மாணவர்களுடன் சென்ற உழவு இயந்திரம் வௌ்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 05 மாணவர்கள் மீட்கப்பட்டதோடு 06 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே காணாமற் போயுள்ளனர்.

இதுவரை 5 மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு மாணவனை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இது தவிர உழவு இயந்திர சாரதி மற்றும் மற்றுமொருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments