Thursday, December 5, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeBreaking Newsவெளியானது மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் பெயர்பட்டியல்...!

வெளியானது மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் பெயர்பட்டியல்…!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க இன்று (04) நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

இதற்கமைய மொத்தமாக 362 அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் 172 அனுமதிப் பத்திரங்கள் FL4 எனப்படும் சில்லறை மதுபான விற்பனை (wine stores) அனுமதிப் பத்திரங்களாகும்.

மேல் மாகாணத்துக்கு 110 மதுபான அனுமதிப் பத்திரங்களும், தென் மாகாணத்துக்கு 48, வடக்கு மாகாணத்துக்கு 32, கிழக்கு மாகாணத்துக்கு 22, மத்திய மாகாணத்துக்கு 45, வடமத்திய மாகாணத்துக்கு 14, வடமேல் மாகாணத்துக்கு 30, ஊவா மாகாணத்துக்கு 30, சப்ரகமுவ மாகாணத்துக்கு 30 என்ற அடிப்படையில் 331 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

FL4 எனப்படும் சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்கள் 172 அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட ரீதியாக கொழும்பு 22,
கம்பஹா 18,
களுத்துறை 8,
காலி 9,
மாத்தறை 5,
அம்பாந்தோட்டை 5,
யாழ்ப்பாணம் 5,
கிளிநொச்சி 16,
வவுனியா 2,
மன்னார் 2,
திருகோணமலை 4,
மட்டக்களப்பு 1,
அம்பாறை 5,
கண்டி 11,
மாத்தளை 6,
நுவரெலியா 8,
அநுராதபுரம் 4,
பொலனறுவை 3,
புத்தளம் 6,
குருணாகலை 8,
பதுளை 9,
மொணராகலை 7,
இரத்தினபுரி 6 ,
கேகாலை 2 என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எந்த விதமான மதுபான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று காலை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments