சவூதி அரேபியாவுக்கு உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள சிங்கப்பூர்களுக்கு அப்பயணத்தை அதை ஒத்திவைக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சவூதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மோசமாக இருப்பதால் இவ்வாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக முயிஸ் அமைப்பு கூறியுள்ளது.
சவூதி அரேபியாமீது அதிகமான ஏவுகணை, வானூர்தித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருவதையொட்டி அந்நாட்டுக்கு எல்ல விதப் பயணங்களையும் தள்ளிப்போடுமாறு வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஒக்ரோபர் 13) ஆலோசனை அறிக்கை மூலம் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டது.
வெளியுறவு அமைச்சின் அந்தப் பயண ஆலோசனையைக் கேட்டு நடக்குமாறு முயிஸ் இன்று புதன்கிழமை (14) அறிக்கை மூலம் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டது.
