பதவிய போகஹாவெவ பகுதியில், நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பதவிய போகஹாவெவ – பாலயாவெவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குறித்த பெண்ணின் மகளை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாமென காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
உந்துருளியில் பிரவேசித்த அடையாளந் தெரியாத இருவரினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும் அந்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.