கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள பாடசாலைகளைக் குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
குறித்த தாக்குதலில் சிறுவர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.