பாகிஸ்தான் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட தொடரை தென்னாபிரிக்க அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ரி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்கில் நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. அப்பகுதியில் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் போட்டி ஆரம்பமாகுவதில் தாமதம் ஏற்பட்டது.
தொடர்ந்து மழை நிற்காமல் பெய்ததால் போட்டி இரத்துசெய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.