வடக்கு காசாவிலுள்ள 2 வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கமால் அத்வான் மற்றும் அல் அவ்தா ஆகிய வைத்தியசாலைகள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்களில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 45,000ஐ கடந்துள்ளது.
மேலும் 107,573 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.