கனடாவின் டொரன்டோ மற்றும் டொரன்டோ பெரும்பாக பகுதியில் சிறிதளவு வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பான எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளது.
20 முதல் 40 மில்லி மீட்டர் வரையிலான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாழ்நிலைப்பகுதிகளில் சிறு வெள்ள நிலைமை ஏற்படலாம் எனவும் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
நிலப்பகுதி பனி படலத்தினால் சூழ்ந்து இருப்பதனால் மழைநீர் நிலத்திற்குள் உள்ளிருக்கக் கூடிய வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வெள்ள நீர் தேங்கி நிற்கக்கூடிய சாத்தியம் அதிக அளவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.