Wednesday, January 8, 2025
HomeMain Newsபுதிய வருடத்தின் சவால்கள் குறித்து ஜனாதிபதி வௌியிட்ட விடயம்

புதிய வருடத்தின் சவால்கள் குறித்து ஜனாதிபதி வௌியிட்ட விடயம்

புதிய வருடத்தில் புதிய பரிணாமத்திற்கு செல்லவேண்டிய சலால் அரசாங்கத்திற்கு காணப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

“க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வௌியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த சவாலை நிறைவேற்றுவதற்கு முழு அரசியல் அதிகாரமும் துணை நிற்கும் என்று தெரிவித்த ஜனாதிபதி, புதிய அரசியல் கலாசாரத்துடன் புத்தாண்டு ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, இலஞ்சமும் ஊழலும் புற்று நோயாக நாடு முழுவதும் பரவியுள்ளதாக தெரிவித்தார்.

ஊழல் மோசடிகளை நிறுத்துவதற்கு அரசியல் அதிகாரத்தின் தலையீடும் முன்னுதாரணமும் மாத்திரம் போதாது என ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்தோடு, அரச நிறுவனங்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை சரியாக புரிந்து கொண்டு அதற்கான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments