ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து வளர்ந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுலைமான் அல் மஜித் (வயது 26).
டாக்டரான இவர் இங்கிலாந்தில் உள்ள கவுண்டி டர்ஹாம் மற்றும் டார்லிங்டன் என்ஹெச்எஸ் அறக்கட்டளையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் புத்தாண்டையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் சுலைமான் தனது குடும்பத்துடன் விமானத்தில் பறக்க திட்டமிட்டார். இதற்காக சிறிய ரக விமானத்தை வாடகைக்கு எடுத்தார்.
குடும்பத்தினரை அழைத்துச் செல்வதற்கு முன்னதாக தான் மட்டும் ஒருமுறை விமானத்தில் செல்ல சுலைமான் முடிவு செய்தார்.
அதன்படி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
விமானத்தை பாகிஸ்தானை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் ஓட்டினார்.
சுலைமான் இணை விமானியாக இருந்தார்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியது. விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 பேரும் உயிரிழந்தனர்.
சுலைமானின் குடும்பத்தினர் கண் முன்னே இந்த விபத்து நடந்தது.