19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிகள் மலேசியாவில் இடம்பெறவுள்ளன.
ஏ குழுவில் அங்கம் வகிக்கும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இலங்கை மகளிர் அணி எதிர்வரும் 19 ஆம் திகதி மலேசிய மகளிர் அணியுடனான போட்டியில் பங்கேற்கவுள்ளது.
இந்த போட்டி கோலாலம்பூரில் இடம்பெறவுள்ளது.
4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த தொடரில் 16 அணிகள் அங்கம் வகிக்கின்றன.