கொலம்பியாவில் இடம்பெற்றுவரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கானோர் குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த சுமார் 5,000 பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.