காலி, பத்தேகம , எத்கந்துர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வொன்றின் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) பத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் மூவரும் பத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் படபொல மற்றும் எத்கந்துர ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21, 33 மற்றும் 41 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.