கனடாவின் வான்கூவர் தீவுக்கும், வாஷிங்டன் மாநிலத்திற்கும் இடையில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று அதிகாலை 5:02 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
விக்டோரியா மற்றும் வாங்கூவர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.
மேலும், இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை எனவும், ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.