Saturday, May 3, 2025
HomeMain NewsSri Lankaஇஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு...!

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு…!

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, ரூ.10 இலட்சமாக இருந்த பரிசுத் தொகை தற்பொழுது ரூ.12 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இஷாரா செவ்வந்தி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்திருந்தால், அதனை அறியப்படுத்துவதற்குப் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. பணிப்பாளர், கொழும்பு குற்றவியல் பிரிவு – 071 859 1727

2. கொழும்பு குற்றவியல் பிரிவின் கட்டளைத் தளபதி – 071 859 1735

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments