காஸா போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து நிச்சயமற்ற தன்மை நீடிப்பதால், பேச்சுவார்த்தை குழு ஒன்றை டோஹாவிற்கு அனுப்பவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை எதிர்க்கும் நான்கு ஐரோப்பிய நாடுகளும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் எகிப்து தலைமையிலான காஸாவின் மறுகட்டமைப்புக்கான திட்டத்தை ஆதரிப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரையில் 48,553 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், 1,11,860 பேர் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் 14 பேர் கொல்லப்பட்டதுடன் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 5 சிறுவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலினால் பல கட்டடங்கள் மற்றும் சுமார் 30 வாகனங்கள் சேதமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.