Tuesday, February 3, 2026
HomeMain NewsSri Lankaசதொச நிறுவனத்தினால் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைப்பு..!

சதொச நிறுவனத்தினால் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைப்பு..!

லங்கா சதொச நிறுவனத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 277 ரூபாய்.

ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 279 ரூபாய்.

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 162 ரூபாய்.

ரின் மீன் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 490 ரூபாய்.

ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 185 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ கிராம் வெள்ளை கௌப்பியின் விலை 45 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 750 ரூபாய்.

ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 160 ரூபாய்.

ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூண்டின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 575 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular