ரஜினியின் கூலி பட ஷூட்டிங் நிறைவு.. அதிரடியாக வெளிவந்த மேக்கிங் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சோப்பின் சபீர், உபேந்திரா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

மேலும், இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மீதமிருக்கும் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கூலி படத்தின் ஷூட்டிங் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும், படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

https://x.com/sunpictures/status/1901652985744441405

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles