Wednesday, April 16, 2025
HomeMain NewsMiddle Eastஇஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் பலி...!

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் பலி…!

தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது.

ஜனவரி மாதம் ஆரம்பமான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகப் பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் அலுவலகத்தில் உறுப்பினராக இருக்கும் பர்தவீலுடன் சேர்ந்து அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே செய்தியை ஹமாஸ் ஆதரவு ஊடகங்களும் வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments