காஸா பகுதியில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் செய்தி தொடர்பாளர் உள்ளிட்ட 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் 30 பேர் காஸாவின் வடபகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் காஸாவிலுள்ள இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மீண்டும் கடுமையான பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 50,208 பேர் உயிரிழந்துள்ளதுடன், 113,910 பேர் காயமடைந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.