Thursday, May 22, 2025
HomeMain NewsCanadaகனேடிய மாகாணமொன்றில் வெளிநாட்டு மாணவர்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்..!

கனேடிய மாகாணமொன்றில் வெளிநாட்டு மாணவர்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்..!

பிரித்தானியாவைப் போலவே, சர்வதேச மாணவர்கள் மீது விதித்த கட்டுப்பாடுகளால் கனடாவிலும் சில மாகாணங்களிலுள்ள பல்கலைகள் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.

கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள சுமார் ஏழு பல்கலைக்கழகங்கள் 2025 – 26 கல்வி ஆண்டில் பெரும் சிக்கலை எதிர்கொள்ள இருக்கின்றன.

சுமார் 200 மில்லியன் டொலர்கள் அளவுக்கு அவை நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் போதுமான ஆதரவு இல்லாதது ஒரு பக்கமிருக்க, பிரித்தானியாவைப்போலவே கனடாவும் சர்வதேச மாணவர்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

ஆகவே, கனடா பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கியது.

தற்போது, கனடாவில் கல்வி கற்பதற்காக விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 43 சதவிகிதம் குறைந்துள்ளது.

வழக்கமாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் தோராயமாக 30 சதவிகித மாணவர்கள் எண்ணிக்கை குறைய இருப்பதால், கியூபெக் மாகாண பல்கலைக்கழகங்கள் 200 மில்லியன் டொலர்கள் அளவுக்கு நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ள இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

பல்கலைகள் தொடர்பிலான துறைசார் அமைப்பொன்றின் தலைவரான Christian Blanchette இது குறித்து கூறும்போது,

“ஒரு ஆண்டிலேயே இவ்வளவு இழப்பு என்றால், இரண்டு மூன்று ஆண்டுகள் இதே நிலைமை நீடிக்குமானால், பல்கலைகளின் நிலைமை படுமோசமாகிவிடும்” என்கிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments