Friday, May 23, 2025
HomeMain NewsCanadaகனடாவில் மனித கரங்கள் தொடாது மேற்கொள்ளப்படும் கீரை விவசாயம்

கனடாவில் மனித கரங்கள் தொடாது மேற்கொள்ளப்படும் கீரை விவசாயம்

ஓன்டாரியோவின் கிங் சிட்டி டவுன்சிப் King City Township பகுதியில் மண்ணாலான ஒரு பாதையில் அமைந்துள்ள Haven Greens என்ற நிறுவனம், மனிதன் தொடாமல், முழுமையாக தானியங்கி இயந்திரங்கள் மூலம் லெட்டூஸ் வகை இலைக்கோசு கீரைகளை பயிர் செய்து அசத்தி வருகின்றது.

மக்களுக்கு குறைந்த செலவில் அதிக சத்துணவுகளை வழங்குவதற்காக நாங்கள் உயர் தரமான தானியங்கி கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பயன்படுத்துகிறோம்.

எங்கள் லைன்களில் இருந்து அதிக அளவிலான உற்பத்தியை பெறுகிறோம் என நிறுவனம் தெரிவித்துள்ள. ஆண்டு முழுவதும் நறுமணமிக்க, கெமிக்கல் பூசப்படாத, non-GMO வகை லெட்டூஸ் இலைகளை வளர்க்கின்றனர்.

சூரிய ஆற்றல் மற்றும் ஏ.ஐ. (AI) தொழில்நுட்பம் மூலம் உற்பத்தி நடைபெறுகிறது. இலைக்கள் 24-25 நாட்களில் வளர்க்கப்படுகின்றன.

மனிதன் தொடாமை, இலைக்களின் தூய்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றது என நிறுவனம் தெரிவித்துள்ளது. “எங்களின் தயாரிப்புகள் நன்கு சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்றன.

எந்தவிதமான இரசாயன பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும், இது புதிய பொருளாகவே இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments