காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசாவில் வெவ்வேறு பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
தாக்குதலில் கொல்லப்பட்ட 40 பேரில், சுமார் 36 பேரின் சடலங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.