Thursday, June 12, 2025
HomeMain NewsTechnology50MP செல்ஃபி கேமராவுடன் சியோமி சிவி 50 ப்ரோ அறிமுகம்

50MP செல்ஃபி கேமராவுடன் சியோமி சிவி 50 ப்ரோ அறிமுகம்

சியோமி சிவி 5 Pro ஸ்மார்ட்போன் சியோமி 15S Pro உடன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்திய சிவி மாடல் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட் மற்றும் 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரியுடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, லெய்கா பிராண்டிங் மற்றும் மூன்று கேமரா சென்சார்களை கொண்டுள்ளது.

சீனாவில் சியோமி சிவி 5 Pro விலை 12GB + 256GB மாடல் CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ. 35,700) இல் தொடங்குகிறது.

12GB + 512GB மாடலின் விலை CNY 3,299 (இந்திய மதிப்பில் ரூ. 39,300), அதே நேரத்தில் உயர்நிலை 16GB + 512GB RAM மாடல் CNY 3,599 (இந்திய மதிப்பில் ரூ. 42,800) இல் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பிளாக், செர்ரி பிளாசம் பிங்க், ஐஸ்ட் அமெரிக்கானோ, நெபுலா பர்பிள் மற்றும் வைட் நிற ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது.

சியோமி சிவி 5 Pro அம்சங்கள்

சியோமி சிவி 5 Pro ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் 1.5K (1236×2750 பிக்சல்) டிஸ்ப்ளே 120Hz ரிப்ரெஷ் ரேட், 3200 nits பிரைட்னஸ், HDR10+ மற்றும் டால்பி விஷன் உடன் வருகிறது.

மைக்ரோ-கர்வ்டு OLED டிஸ்ப்ளே 1.6mm சீரான, குறுகிய பெசல்கள் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4nm முறையில் உருவான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இது 16GB வரை LPDDR5X RAM மற்றும் 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2.0 கொண்டுள்ளது.

கேமராவை பொருத்தவரை சியோமி சிவி 5 Pro மாடலில் லெய்கா பிராண்டின் மூன்று கேமரா சென்சார்களை கொண்டுள்ளது.

இதில் f/1.63 மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50MP கேமரா, 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ராவைடு-ஆங்கிள் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் f/2.0, ஆட்டோ-ஃபோகஸ் ஆதரவுடன் 50MP கேமரா உள்ளது.

சியோமி சிவி 5 Pro ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

இது 67W வயர்டு சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5G, டூயல் 4G VoLTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, Beidou, Galileo, GLONASS, GPS, NavIC, NFC மற்றும் USB Type-C கனெக்டிவிட்டியுடன் கிடைக்கிறது.

இது IR சென்சார், டால்பி அட்மாஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 181 கிராம் எடை கொண்டது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments