Monday, February 2, 2026
HomeSportsஇந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் : Playoff சுற்று இன்று...!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் : Playoff சுற்று இன்று…!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் Playoff சுற்று இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த சுற்றின் முதலாவது தகுதிகாண் போட்டியில் இன்று, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன.
குறித்த இப் போட்டியானது இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
முதலாவது தகுதிகாண் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும்.
குறித்த முதலாவது தகுதிகாண் போட்டியில் தோல்வியடையும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன், எதிர்வரும் 1ஆம் திகதி இரண்டாவது தகுதிகாண் போட்டியில் மோதும்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்கான 2 ஆவது அணியாகத் தெரிவாகும் என்பதுடன், தோல்வியடையும் அணி, போட்டியிலிருந்து வெளியேறும்.
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular