ட்ரம்பிற்கு எதிராக எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளாரா?

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அரசு கொண்டுவந்துள்ள ‘பிக் பியூட்டிஃபுல் பில்’ எனப்படும் வரிக்குறைப்பு மசோதா தொடர்பாக எலான் மஸ்க் கடும் எதிர்வினை ஆற்றி வருகிறார்.

அரசு செயல்திறன் துறை தலைவர் பதவியை துறந்த எலான் மஸ்க், ட்ரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தான் உதவியிராவிட்டால் ட்ரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் 80% நடுத்தர மக்களின் பிரிதிநிதியாக புதிய கட்சியை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதா?” என X தளத்தில் எலான் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார். இதன்மூலம் மஸ்க் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளாரா என்ற கேள்வி வலுவடைந்துள்ளது.

இதற்கிடையே எப்ஸ்ட்டீன் கோப்புகள் எனப்படும், தொழிலதிபர்கள், பெரும்புள்ளிகள் தொடர்புடைய சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக வலையமைப்பு தொடர்பான வழக்கில் ட்ரம்ப்பும் சம்மந்தப்பட்டுள்ளார் என்று எலான் மஸ்க் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

ட்ரம்ப் மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் வழக்குகள் உள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு கவனம் பெற்றுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles