சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளிற்கு அமெரிக்கா தடை விதிப்பு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நீதிபதி உட்பட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான இந்த நால்வரும் அமெரிக்காவையும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலையும் இலக்குவைத்து ஐ.சி.சி.யின் சட்டவிரோத ஆதாரமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்

சர்வதேச குற்றவியல்நீதிமன்றம் அரசியல்மயமாக்கப்பட்டுள்துஎன அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நீதிமன்றத்தின் முன் விசாரணை மற்றும் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த நீதிபதிகள் ரெய்ன் அடிலெய்ட் சோஃபி அலபினி கன்சோ மற்றும் பெட்டி ஹோஹ்லர் ஆகியோர் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோரை குறிவைத்து பிடியாணைகளை பிறப்பிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச நீதித்துறை நிறுவனத்தின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தெளிவான முயற்சி என தெரிவித்துள்ள ஐ.சி.சி பொறுப்புக்கூறலிற்காக பாடுபடுபவர்களை இலக்குவைப்பது மோதலில் சிக்குண்டுள்ள மக்களிற்கு எந்த வகையிலும் உதவாது என தெரிவித்துள்ளது.

ஐ.சி.சியின் மேல்முறையீட்டுப் பிரிவைச் சேர்ந்த நீதிபதிகள் உகாண்டாவைச் சேர்ந்த சோலோமி பலுங்கி போசா மற்றும் பெருவைச் சேர்ந்த லஸ் டெல் கார்மென் இபனெஸ் கார்ரான்சா ஆகியோர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் அமெரிக்க படையினர் இழைத்ததாக தெரிவிக்கப்படும் யுத்த குற்றங்கள் குறித்து ஐ.சி.சி விசாரணையைத் தொடங்க வழி வகுத்த குழுவில் இடம்பெற்றனர்

நவம்பர் 2024 இல் ஐ.சி.சி தலைமை வழக்கறிஞர் கரீம் கான் நெதன்யாகு மற்றும் கேலன்ட் மற்றும் மூன்று மூத்த ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தார். இந்த நடவடிக்கை பைடன் நிர்வாகத்திடமிருந்து எதிர்ப்புகளைப் பெற்றது முன்னாள் ஜனாதிபதி இதை “மூர்க்கத்தனமானது” என்று அழைத்தார்.

ஐ.நா தலைமையிலான பாலியல் துஷ்பிரயோக விசாரணைக்கு மத்தியில் கான் கடந்த மாதம் தனது பதவியில் இருந்து விலகினார்

ஜனாதிபதி டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் அமெரிக்க அரசாங்கம் ஐ.சி.சி வழக்கறிஞர் ஃபடோ பென்சவுடா மற்றும் மூத்த அதிகாரி ஃபாகிசோ மோச்சோச்சோகோ ஆகியோர் மீது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரித்ததற்காக தடைகளை விதித்தது – பின்னர் பைடன் நிர்வாகத்தால் நீக்கப்பட்டது.

அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்ற ஐ.சி.சி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்தார்.

இந்த நடவடிக்கையை ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் வரவேற்க வாய்ப்புள்ளது – மார்ச் 2023 இல் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.

ஐ.சி.சி-யை நிறுவிய ரோம் சட்டத்தில் அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ கைச்சாத்திடவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles